5 குழந்தை பெத்துக்க நினைச்சோம்.... ஆனால் - பிரபு தேவா Ex மனைவி வருத்தம்!
பிரபுதேவா தனிப்பட்ட வாழ்க்கை:
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா தன்னுடன் குரூப் டான்சராக நடனமாடி வந்த லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.

ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டிலேயே புற்றுநோய் காரணமாக இருந்துவிட்டது. தற்போது இரண்டு பிள்ளைகள் தான் பிரபுதேவாவுடன் இருந்து வருகிறார்கள். இதனிடையே நயன்தாராவை காதலித்போது பிரபுதேவா தனது மனைவி லதாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .
அதன் பிறகு மருத்துவப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபுதேவா உடனான உறவு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் .
5 குழந்தை பெத்துக்க நினைச்சோம்:
நான் என்னுடைய கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்று ஒருபோதும் அழுது கவலைப்பட்டு இருந்ததே இல்லை. அப்படி நான் கவலைப்பட்டிருந்தால் என்னுடைய பிள்ளைகளை எப்படி வளர்க்க முடியும்? அதனாலே நான் அதை பற்றி நினைக்க மாட்டேன் .
அமைதியாக வாழ்க்கையை நடத்தி செல்கிறேன். என்னுடைய பிள்ளைகளுக்கு என்ன தேவையோ அது அந்த நேரத்துக்கு மிகச் சரியாக செய்து கொடுப்பார் அவருடைய அப்பா பிரபுதேவா . பிள்ளைகள் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும்

நாங்கள் ஐந்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ள நினைத்தோம். ஆனால் இரண்டு பிள்ளைகள் தான் இருக்கிறார்கள். நல்லபடியா அவங்கள அவர் பார்த்துக்கொள்கிறார். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியா இருக்கு. பெருசா எனக்கு கவலை எதுவுமே இல்லை நான் மகிழ்ச்சியா வாழ்கிறேன். இப்போ கூட என்னுடைய பிள்ளைகள் அப்பாவை பார்க்க பிரபுதேவா வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதுதான் எங்களுக்கு இடையே உள்ள புரிதல் என லதா கூறினார்.
