×

ஹரஹர மஹாதேவகி இயக்குநர் படத்தில் பிரவுதேவா ரைசா...

ஹரஹர மஹாதேவகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபு தேவா.

 
c92e43fd-2414-4ed6-8f8c-3e2e0ca14c47

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். 

பிசியாக படங்கள் இயக்கி வந்தாலும், தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹரஹர மஹாதேவகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபு தேவா. இந்த திரைப்படத்தை தனுஷின் முன்னாள் மேலாளரும், ‘வெள்ளை யானை’, ‘எனிமி’ படங்களின் தயாரித்த வினோத்குமார் தயாரிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இந்நிலையில் இன்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக டி.இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News