×

முதன் முறையாக மொட்டை போட்ட பிரபுதேவா?.. எந்த படத்திற்கு தெரியுமா?..

 

நடன இயக்குனராக இருந்து, நடிகராக மாறி, பின்னர் இயக்குனராக மாறியவர் பிரபுதேவா. தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஒருபக்கம் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹீரா’ என்கிற புதியபடத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இப்படத்தில் அனேகன் படத்தில் தனுஷுடன் நடித்த அமைரா தஸ்துர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முக்கிய செய்தியாக இப்படத்திற்காக பிரபுதேவா மொட்டை போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News