×

டாக்டருடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா... இது எத்தனை நாளைக்குன்னு தெரியலையே ராசா

பிரபுதேவாவுக்கும், பீகாரை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

மும்பையில் தங்கியிருக்கும் பிரபுதேவா கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்பொழுது சிகிச்சைக்காக சென்ற இடத்தில் அந்த டாக்டருடன் காதல் ஏற்பட்டதாம்.

இதையடுத்து குடும்பத்தாரிடம் விஷயத்தை சொல்லி, அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்களாம். பிரபுதேவாவுக்காக அவரின் மனைவி தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம். விவாகரத்தான 9 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


பிரபுதேவாவின் திருமணம் சென்னையில் இருக்கும் அவர் வீட்டில் வைத்து தான் நடந்ததாம். திருமணத்தில் இரு வீட்டார் தவிர்த்து நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் நடந்தபோதிலும் தற்போது தான் அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News