
Cinema News
பிரபுவுக்கு அவ்ளோ பெரிய மனசா…? அதனால தான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்காரா..?
Published on
இளையதிலகம் பிரபு நடித்த படங்கள் என்றாலே தாய்மார்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். இவர் எப்போதும் புன்சிரிப்புக்குச் சொந்தக்காரர். அதே போல இவர் கன்னக்குழி விழ சிரிக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அது ஒரு சிலருக்குத் தான் வாய்க்கும்.
இவர் இயல்பாக பழகக்கூடிய இனிமையான நபர் என்பது இவரைப் பார்க்கும் போதே தெரிகிறது. சின்னத்தம்பி, செந்தமிழ்ப்பாட்டு, உழவன், டூயட், ராஜகுமாரன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், வெற்றி விழா படங்களைப் பார்க்கும் போது இவரது நடிப்பு அபாரமாக இருக்கும்.
இதையும் படிங்க… பராசக்தி காலகட்டத்திலேயே சிவாஜிக்கு இருந்த அந்த வெறி… அப்படியே நடந்துடுச்சே..!
இந்தப் படங்களில் இவர் நடித்த சின்னத்தம்பி தான் இவரது திரையுலக வாழ்க்கையிலேயே மைல் கல்லாக அமைந்த படம். அந்தப் படத்தில் சின்னத்தம்பியாக வந்து வெள்ளந்தியான அந்தக் கேரக்டரில் இவர் அருமையாக நடித்து இருப்பார்.
இதே படத்தில் நடித்த குஷ்பூவுக்கும் அப்போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருவரது கெமிஸ்ட்ரியும் நல்லா ஒர்க் அவுட்டாக தொடர்ந்து இவர்களது படங்கள் வந்தன. அப்போது இருவருக்கும் இடையே காதல், கல்யாணம் என்றெல்லாம் கூட கிசுகிசு வந்தன.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் , பிரபல யூடியூபர், சினிமா விமர்சகர்னு பன்முகத்திறன் கொண்டவர் சித்ரா லெட்சுமணன். இவரிடம் வாசகர் ஒருவர் நடிகர் பிரபு சூட்டிங்ஸ்பாட்ல யார் மேலயாவது கோபப்பட்டு இருக்காரான்னு கேள்வி கேட்க, அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.
பிரபுவைப் பொருத்தவரைக்கும் அவர் அறிமுகமான காலகட்டத்துல இருந்து நான் பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். அவருக்குக் கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. அவரைப் பொருத்தவரை குழந்தை மனதுக்கு சொந்தக்காரர். யாராவது அவரிடம் கோபப்பட்டா கூட உடனடியாக சென்று சமாதானப்படுத்தக்கூடியவர் தான் அவர் என்கிறார்.
இதையும் படிங்க… பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலால் அதிர்ந்து போன எம்ஜிஆர்… அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
இவரைப் போன்ற நடிகர்கள் தமிழ்த்திரை உலகில் பார்ப்பதே அரிது. ஈகோ என்பதே இவரது அகராதியில் கிடையாது. அதனால் தான் கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், அஜீத் குமார், மோகன்லால் என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...