பாரதிராஜா குறித்து அப்பா சொன்ன அந்த வார்த்தை... பிரபு சொன்ன தகவல் ​​​​​​​

 
prabhu, sivaji, bharathiraja

என் இனிய தமிழ் மக்களே என்ற இனிமையான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் என் அருமை அண்ணன் பாரதிராஜா. இனி அந்தக் குரலைக் கேட்கப் போறோமான்னு தெரியல. ஆனா அந்தக் குரல் நம்ம கூடவே வாழ்ந்துக்கிட்டு இருக்கு. கிராமத்துக் கதைகள், கலாச்சாரத்துக்கு மையப்பட்டு முக்கால்வாசி படங்களை எடுத்து இருக்கிறார். எனது இனிய மக்களே என்று வார்த்தை வரும்போது திரையரங்கமே கரகோஷமா இருக்கும்.

அப்படி மக்களோட மனசுல போய் அருமையான இடத்தைப் பிடிச்சவர் என் அருமை அண்ணன் பாரதிராஜா. முதல் மரியாதை படம் பார்த்துட்டு ஐயா வந்து கூப்பிட்டாங்க. முதல் மரியாதை கதையைக் கேட்டுட்டு எங்க அய்யா பாரதிராஜாவை வீட்டுக்குக் கூப்பிட்டாங்க. ராசா ராசான்னு தான் பிரியமா கூப்பிடுவாங்க. நான் எத்தனையோ படங்கள் பண்ணிட்டேன். எத்தனையோ டைரக்டர்கள் கூட, எத்தனையோ நடிகர்கள் கூட பண்ணிட்டேன். நல்ல நல்ல படங்கள் எல்லாம் பண்ணிருக்கேன்.

ஆனா என் வீட்டுல உள்ள என் மனைவி கமலா என்னை சொல்றான்னா, நீ பாரதிராஜா கூட நடிச்சாத்தான் முழு நடிகர்னு சொல்றாப்பா அப்படின்னாரு. அந்தளவுக்கு மக்களோட மனசுல இடம்பிடிச்சவர்தான் பாரதிராஜா. திரை உலகம் இருக்குற வரைக்கும் அவர் வாழ்ந்துக்கிட்டே இருப்பார். எனது அருமை தம்பி விஜய் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை பண்ணப்போறாருன்னு கேள்விப்பட்ட உடனே ரொம்ப ரொம்ப சந்தோஷம். அவருக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பிரபு.

Tags

From Around the web