அவர் சம்பளமே வாங்கலனு இப்போதான் தெரியும்.. ஷங்கர் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?
கேம்சேஞ்சர்:ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். நேற்று முன்தினம் வெளியான இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. எப்பவும் போல சங்கர் படத்தில் சில விஷயங்கள் ஏற்க முடியாதபடி இருந்தாலும் இந்த படத்தில் ராம்சரண் போட்ட உழைப்பு ரசிகர்களை படத்தைப் பார்க்க ஆர்வத்தை தூண்டியது.
பிரம்மாண்டம் என்றால் ஷங்கர்:இன்னொரு பக்கம் ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்டத்தையும் இந்த படத்தில் பார்க்க முடிந்தது. அவர் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அந்த படத்தில் அமைந்த பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் எடுக்கும் படங்களில் எப்படியாவது ஒரு பாடல் பிரம்மாண்ட பொருட்செலவில் அமைந்திருக்கும்.
எதிர்பார்த்த வசூலா?: அந்த வகையில் இந்தப் படத்திலும் ஐந்து பாடல்கள் மிக பிரம்மாண்டமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. பாடல்களுக்கு மட்டும் 75 கோடி செலவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த 75 கோடியை வைத்து 50 இயக்குனர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்ற வகையிலும் கோடம்பாக்கத்தில் விமர்சித்து வந்தனர். ஆனால் படத்திற்காக போட்ட பட்ஜெடை வசூலில்அல்ல முடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எதிர்பார்த்த அளவு கலெக்சன் இந்த படத்திற்கு அமையவில்லை. இந்த நிலையில் சங்கர் இந்த படத்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். இந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் பிரபுதேவா .எனக்கு இப்பொழுது தான் தெரிந்தது .இந்த படத்திற்கு பிரபுதேவா சம்பளமே வாங்கவில்லை என்று. ஏனெனில் தயாரிப்பாளர் மீது உள்ள அபிமானம், ராம்சரண் மீது உள்ள மரியாதை, என்னுடன் ஏற்கனவே நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறார்.
இவையெல்லாம் வைத்து தான் இந்த படத்திற்கு அவர் சம்பளமே வாங்கவில்லையாம். கிட்டத்தட்ட எட்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அவருடைய உதவியாளர்கள் நிறைய பேர் இருந்தனர். இருந்தாலும் அவர் சம்பளம் வாங்கவில்லை என சங்கர் பிரபுதேவாவை பற்றி கூறியிருக்கிறார்.