பிரபுதேவா - ஏ.ஆர். ரஹ்மானின் மூன்வாக் டிரெய்லர் செம காமெடியா இருக்கே!..
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மூன்வாக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடனம், இசை என நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு பிரபுதேவா ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Moonwalk Tamil Trailer Presenting the Official Tamil Trailer of Moonwalk, starring Prabhudeva, Yogi Babu, Aju Varghese, and Arjun Ashokan, with music by A. R. Rahman and directed by Manoj NS. A. R. Rahman and Prabhudeva reunite after 30 years for a full-length comedy movie packed with music and dance! Moonwalk is a complete family entertainer. Watch, comment, like, share, and celebrate Moonwalk with your family! @moonwalkthefilm #FamilyLaughter #HolidaysLaughter Starring @PDdancing @iYogiBabu @AjuVarghesee #ArjunAshokan @Satzsathish321 Music @arrahman Directed by #ManojNirmalaSreedharan Produced by #ManojNirmalaSreedharan #DivyaManoj and @praveenelak @behindwoods DOP @Anoopvshylaja @NishmaChengapp5 #SushmithaNayak #MottaiRajendran @KingsleyReddin #LolluSabhaSwaminathan #DeepaShankar #DrSanthoshJacob #RamkumarNatarajan #Sekhar #PiyushShazia @Lyricist_Vivek @arivubeing #VishnuEdavan #VigneshRamakrishna #SathyanIlanko @doublejtherapp @tamilankallar #ShanooMuralidharan #SwethaRajuu #DivyaGeorge #Macguffin #SyncCinema #KannanGanpat #Srivfx #Pixstone #Madhanagopal @I_MediaMatte @LahariMusic @Romeopictures_ @mynameisraahul @teamaimpr
— Prabhudheva (@PDdancing) November 27, 2026
இப்படத்தில் யோகி பாபு பல வேடங்களில் நடித்துள்ளார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இப்படத்தில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள மூன்வாக் திரைப்படம் நகைச்சுவை மற்றும் இசை கலந்த ஃபேமிலி எண்டர்டெயின்மெண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
