Connect with us

Bigg Boss

என்னை உள்ளே அனுப்பணுமா… இப்போ இந்த விஷயம் நடக்கணும்… ப்ரதீப் ஆண்டனியின் ஓபன் கண்டிஷன்..!

Biggboss Tamil: தேவையே இல்லாமல் கமல் பெண்களுக்காக பொங்கி எழுந்து கடந்த வாரத்தில் கொடுத்த ரெட் கார்டால் ஒரே வாரத்தில் நிறையவே பட்டுவிட்டார். அதனால் இந்த வார இறுதியில் ஒரு தீர்க்கமான பதிலை அவர் தரவேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ப்ரதீப் ஆண்டனி ஓபன் கண்டிஷனே வைத்து இருக்கிறார்.

கடந்த வாரத்தின் துவக்கத்திலேயே பெண்கள் சிலரும், ஆண்களில் ஓர், இருவரும் உரிமைக்குரலை உயர்த்தினர். அதை கேட்ட கமல் ப்ரதீப் ஆண்டனி தரப்பினை கேட்காமலே அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார். ஆனால் அவர் மீது வைத்த அத்தனை குற்றங்களையுமே ரசிகர்களே பொய் என நிரூபித்து விட்டனர்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் படத்தை டிராப் செய்கிறாரா ரஜினிகாந்த்!.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?..

இதனால் அந்த ரெட் கார்டில் நியாயமே இல்லை எனக் கூறி மீண்டும் ப்ரதீப் ஆண்டனியை நிகழ்ச்சிக்குள்  அழைத்து வரக்கூறி கோரிக்கைகளும் தொடர்ச்சியாக எழுந்துள்ளது. அவர் வருவாரா? இல்லை வரமாட்டாரா என கேள்விகள் எழுந்து வரும் நிலையில் தற்போது ப்ரதீப்பின் லேட்டஸ்ட் ட்வீட் வைரலாகி வருகிறது.

அந்த ட்வீட்டில், ரொம்ப சார்பான பிள்ளைகளால தான் அது முடியும் என்ற வடசென்னை வீடியோவை பதிவிட்டு அதனுடன் எண்டோமால் ஷைன் என்னை உள்ளே அனுப்ப நீங்க முடிவு செய்தால் என் மீது தப்பான புகார் கொடுத்த ரெண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் 7வது வாரத்தின் பிக்பாஸ் கேப்டனாக மாற்றவும் வேண்டும்.

இதையும் படிங்க: எப்பா செழியா மொத்தத்துல உண்மைய சொன்னீயே…! கோபி சார் மூஞ்சு எங்க வச்சிப்பீங்க..!

பாத்து செய்யுங்க என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அடுத்த ட்வீட்டில் நீங்க எனக்கு நல்ல கேமை கொடுத்தால் நானும் சூப்பர் ஷோவை காட்டுவேன் என்று கமல், விஜய் தொலைக்காட்சி மற்றும் எண்டோமால் ஷைனை டேக் செய்து இருக்கிறார். ஒரு படத்தோட இடைவேளை முடிஞ்சி வர பழிவாங்கும் இரண்டாம் பாதி மாதிரி ஆடுவேன் சத்தியம் என பதிவிட்டு அதனுடன் ஓகே கண்மணியின் காரா ஆட்டக்கார பாடலை இணைத்து இருக்கிறார்.

இதனை விசாரிக்கும் வரையில் கண்டிப்பாக ப்ரதீப்பின் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்காது. ஆனாலும் அவரை உள்ளே அழைத்து வரவும் ஏற்பாடுகள் ஒரு பக்கத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ப்ரதீப் தரப்பு இன்னமும் சம்மதிக்கவில்லை என்பதாலே இந்த ஓபன் கண்டிஷன் ட்வீட் எல்லாம் நடப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

Continue Reading

More in Bigg Boss

To Top