
Cinema News
SK Pradeep: சிவகார்த்திகேயன் ஃபார்முலாவை கையில் எடுத்த பிரதீப்.. இப்படியே போனா SK நிலைமை பாவம்தான்
SK Pradeep:
தமிழ் சினிமாவில் தற்போது பேசப்படும் நடிகராக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் அரசியலுக்கு போன பிறகு சிவகார்த்திகேயன் மவுசு அதிகரித்துவிட்டது என்றேஎ சொல்லலாம். விஜய் அஜித் இவர்கள் வரிசையில் சூர்யா, விக்ரம் இருந்தாலும் அவர்களை எல்லாம் இப்போது பின்னுக்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயன் தான் இப்போது டாப் அந்தஸ்தில் இருக்கிறார். எங்கு பார்த்தாலும் சிவகார்த்திகேயன் பேச்சுத்தான் அடிபட்டு வருகிறது.
மூன்றாம் நிலை நடிகர்:
அதற்கேற்ப பொதுவிழாக்கள், பட விழாக்கள் என சிவகார்த்திகேயனை சிறப்பு விருந்தினராக வரவழைத்து அவருக்குண்டான மவுசை இன்னும் அதிகப்படுத்தி வருகின்றனர். எப்போதும் தன்னை லைம்லைட்டிலேயே வைத்துக் கொள்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கெல்லாம் ஒரே காரணம் அமரன் திரைப்படம்தான். அமரன் திரைப்படத்திற்கு முன்பு வரை ஒரு இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நடிகராகத்தான் இருந்தார்.
ஆனால் அமரன் திரைப்படத்தில் அவருடைய தோற்றம், நடிப்பு அந்தப் படத்திற்காக அவர் செய்த அர்ப்பணிப்பு என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அந்தப் பட வெற்றிக்கு முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சொல்ல முடியாது. படத்தின் ஸ்கிரிப்ட் தான் காரணம். இதை பற்றி திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
அவருக்கு கைக் கொடுத்தது இதுதான்:
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஸ்கிரிப்ட்தான் காரணம். அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் படம் ஓடியிருக்கும். ஏனெனில் அது ஒரு பயோபிக். மேலும் சிவகார்த்திகேயன் படம் என்றாலே மக்கள் எதிர்பார்த்து வருவது அவருடைய காமெடியைத்தான். சொல்லப்போனால் ஆரம்பக்காலங்களில் சிவகார்த்திகேயனுக்கு கைக் கொடுத்ததே அவரின் காமெடித்தான்.
அதையும் தாண்டி அமரன் திரைப்படம் வெற்றியடைந்திருக்கிறது என்றால் அது ஒரு பயோபிக். அதில் காமெடி இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏன் மதராஸி படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்திலும் காமெடி என்பது இருக்காது. மத்த ஹீரோக்கள் போல நாமும் கத்தியை தூக்கணும், வெட்டணும்னு நினைத்தால் சிவகார்த்திகேயன் கீழே இறங்க வேண்டியதுதான். அவருக்குண்டான டிரெண்ட் செட்டரே காமெடிதான் என திருப்பூர் சுப்பிரமணி கூறியிருக்கிறார்.
அடுத்த சிவகார்த்திகேயன்;
அவர் சொல்வதை போல சிவகார்த்திகேயன் கெரியரை எடுத்துக் கொண்டால் முக்கால்வாசிப்படங்கள் காமெடியாலேயே வெற்றியடைந்திருக்கின்றன. ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம். ரெமோ, டாக்டர் என காமெடியான படங்கள்தான் அவருக்கு கைக் கொடுத்திருக்கின்றன. இப்போது சிவகார்த்திகேயன் ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார் பிரதீப் ரெங்கநாதன்.
பிரதீப் ரெங்க நாதன் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்திருக்கின்றன. அதற்கு காரணம் அவருடைய காமெடிதான். அதுவும் இன்றைய சூழலில் மக்களும் ஒரு இரண்டரை மணி நேரம் தியேட்டருக்கு போனோமா சிரித்தோமோ சந்தோஷமா வந்தோமா என்றுதான் நினைக்கிறார்கள்.
ஆக்ஷன் வன்முறை என இதை யாருமே இப்போது விரும்புவதாக இல்லை. அதனால் காமெடியான படங்களைத்தான் மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி பிரதீப் ரெங்கநாதனும் அடுத்தடுத்து படங்களை கொடுத்துக் கொண்டே வந்தால் நிச்சயமாக அவரும் ஒரு சிவகார்த்திகேயனாக மாறிவிடுவார்.