இந்த டைட்டில் புடிச்சிருக்கா?.. ஒருவேளை பிரதீப்புக்கே இது புடிக்கலையா?.. இப்படி கேட்கிறாரே!..

0
112

லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலை தனது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:06க்கு வெளியிட்டார்.

நடிகர் சிம்புவை போல நம்பர் 9ஐ விடாமல் இந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக உப்பென்னா, கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சீமான் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா மேனன், யோகி பாபு போன்ற நடிகர்களை வைத்து இயக்கிய கோமாளி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஹீரோவான பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே திரைப்படமும் மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளி கல்லா கட்டியது.

பிரதீப் ரங்கநாதன் தனது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு தனது புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். LIC என ஆரம்பிக்கப்பட்ட அந்த படத்துக்கு பிரச்சனை வந்த நிலையில், LIK என படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர்.

அந்தத் தலைப்பின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன் இந்த தலைப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார். உங்களுக்கு பிடிக்கலையா? என சில நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுள்ளனர். மோதிர டிசைனில் எல்ஐகே டைட்டில் உள்ளது.

google news