
Cinema News
Pradeep: நமக்கு இப்படி ஒரு இடத்தை கொடுத்துட்டாங்களே!.. பீதியில் புலம்பும் பிரதீப் ரங்கநாதன்…
Dude: லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்கள் கொடுத்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கிய பிரதீப் லவ் டுடே படம் மூலம் நடிகராகவும் மாறினார். பார்ப்பதற்கு தனுஷ் போலவே இருக்கிறார், தனுஷ் போலவே நடிக்கிறார் என்கிற விமர்சனம் மீது இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கு என்ன வருமோ அதை செய்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் Dude ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் இந்த தீபாவளிக்கு மற்றும் LIK, Dude என இரண்டு படங்களும் ஒன்றாக வெளியாகவிருந்தது. ஆனால், எப்படியோ பேச்சுவார்த்தை நடந்து தற்போது LIK திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது.
அதேநேரம் Dude திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. எனவே இது தொடர்பான புரமோஷன் வேலைகளில் பிரதீப் ரங்கநாதன் ஈடுபட்டிருக்கிறார். பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இன்று காலை இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு கூலி படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் கடுப்பான ரஜினி கமலுடன் தான் இணைந்து நடிக்கும் படத்தை வேறு ஒரு இயக்குனரிடம் கொடுக்கலாமா என யோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.. அப்போது பிரதீப் பெயரும் அடிபட்டது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்தபோது பிரதீப்பிடம் இதுபற்றி கேட்க மலுப்பலான பதிலை சொல்லிவிட்டு போய்விட்டார். எனவே வெளியான செய்தி உண்மையாகத்தான் இருக்குமோ என பலரும் பேசத் துவங்கிவிட்டனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
ஒருபக்கம், ‘இரண்டு படங்கள் தொடர் ஹிட், ரஜினி கமலை வைத்து படமெடுக்கும் இயக்குனர் என்கிற ரேஞ்சுக்கு என்னை வைத்து பேசுகிறார்கள், எனக்கு இப்படி ஒரு உயரமான இடத்தை, புகழை தமிழக மக்கள் கொடுத்து விட்டார்கள். இதை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. பயமாக இருக்கிறது.. பதட்டமாகவும் இருக்கிறது’ என தனது நண்பர்களுக்கும் சொல்லி ஃபீல் பண்ணி வருகிறாராம் பிரதீப் ரங்கநாதன்.