Categories: Cinema News latest news

விக்னேஷ் சிவன் படம் ஓவரா!.. அடுத்த படத்தில் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன்!.. இயக்குநர் யாரு தெரியுமா?..

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட நடிகர்களை வைத்து கோமாளி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த முதல் படமான லவ் டுடே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார். அப்பா கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்யாணமே இன்னும் ஆகல!.. அதுக்குள்ள ஆயில் மசாஜா!.. வரலக்‌ஷ்மி சரத்குமார் ரொம்ப விவரம் தான்!..

விக்னேஷ் சிவன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக இன்னமும் அறிவிப்பு வெளியாகாத நிலையில், அதற்குள் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அர்ச்சனா கல்பாத்தி அதிரடி போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுவும் அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில் தான் அடுத்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.

இதையும் படிங்க:கமலுக்கு பதில் என்னை அந்த படத்துல ஹீரோவா புக் பண்ண பாலசந்தர்!.. நிழல்கள் ரவி சொன்ன சீக்ரெட்!..

காம்போவே செமைய்யா இருக்கே பாஸ் என ரசிகர்கள் வெயிட் பண்ண பிரதீப் ரங்கநாதன் தற்போது அவர் தரப்பில் இருந்தும் அதை உறுதி செய்துள்ளார். வரும் மே 1ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து அப்டேட்களாக போட்டு தாக்கி வருகிறார்.

அந்த படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.  அந்த வீடியோவில் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக பண்ண விஷயத்தை ரீக்ரியேட் செய்து அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரதீப் ரங்கநாதன் இனிமேல் இயக்குநராக படம் இயக்குவதற்கு பதிலாக ஹீரோவாக நடித்து அசத்த போவது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க: கோட் படம் விஜய் படமா? செக் வைத்த டாப் ஸ்டார் பிரசாந்த்… அடிக்கடி இப்படியே சொல்றாரே!

Saranya M
Published by
Saranya M