3-வது வாரத்தில் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே : மாஸ் காட்டும் வசூல் நிலவரம்

 
3-வது வாரத்தில் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே : மாஸ் காட்டும் வசூல் நிலவரம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எல்ஐகே படம் இன்று வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

204ம் ஆண்டுகளில் காதல் செய்வதற்குகூட கேட்ஜெட்களின் ஆதிக்கம் வந்துவிடும் என்ற ஒரு கற்பனையான மற்றும் புதுமையான கான்செப்டை மையமாக வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது வழக்கமான ரொமாண்டிக் காமெடி பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தொட்ர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மற்றும் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் உள்ளன. இப்படம் வெளியாகி கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் வசூலை பொறுத்தமட்டில் அனைவ்ருக்கும் மைழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறை என்பதால், வார நாட்களில் கூட கூட்டம் ஓரளவிற்கு வருவதாக கூறுகிறார்கள். கடந்த இரண்டு வார முடிவில் இப்படம் உலக அளவில் இதுவரை சுமார் ரூ. 50 முதல் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. லாஜிக் மீறல்களைத் தாண்டி, இரண்டரை மணி நேரம் திரையரங்கில் ஜாலியாகச் சிரித்து மகிழலாம் என்ற ரசிகர்களின் விமர்சனமே படத்தினை 3-வது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடச் செய்து வருகிறது.

From Around the web