Pradeep Ranganathan: அடுத்த பட இயக்குனரை லாக் செய்த பிரதீப்! இந்தப் படமும் அப்போ ஹிட்டா?

 
Pradeep Ranganathan: அடுத்த பட இயக்குனரை லாக் செய்த பிரதீப்! இந்தப் படமும் அப்போ ஹிட்டா?

தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரெங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரெங்கநாதன் இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானார். காலங்கள் மாற மாற டெக்னாலஜியும் மாறிக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறையினரின் பார்வையும் மாறும்.

குறிப்பாக சினிமா பற்றிய பார்வை முற்றிலும் மாறுபடும். இப்போதுள்ள தலைமுறையினர் ஒரு இரண்டரை மணி நேரம் தியேட்டரில் விசில் அடித்தும் ஆரவாரம் செய்தும் ஜாலியாக இருக்கவும்தான் விரும்புகிறார்கள். அவர்களிடம் சென்டிமென்ட்டான கதையை திணிக்க முடியாது. அப்படி பிரதீப் ரெங்கநாதன் அவர்களின் பல்ஸை பிடித்து பார்த்திருக்கிறார். அவருடைய படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்பத்தான் இருக்கிறது.

அதனால்தான் அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்த மூன்று படங்களும் செம ஹிட். பாக்ஸ் ஆஃபிஸிலும் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் எல்.ஐ.கே படத்தில் நடித்து முடித்துள்ள பிரதீப் ரெங்கநாதன் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அடுத்த படத்தை இயக்க போகிறாரா அல்லது நடிக்க போகிறாரா என்ற ஒரு கேள்வி இருந்தது.

ஆனால் அடுத்தும் ஹீரோவாகத்தான் நடிக்க போகிறார் பிரதீப் ரெங்கநாதன். அதுவும் 2021 ஆம் ஆண்டு வெளியான ரைட்டர் படத்தை இயக்கிய ஃபிராங்களின் ஜேக்கப் இயக்கத்தில்தான் நடிக்க போகிறாராம் பிரதீப் ரெங்கநாதன். ரைட்டர் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பொலிட்டிக்கல் திரில்லர் படம். பாசிட்டிவ்வான விமர்சனத்தையே பெற்றது.

Pradeep Ranganathan: அடுத்த பட இயக்குனரை லாக் செய்த பிரதீப்! இந்தப் படமும் அப்போ ஹிட்டா?

நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த பிரதீப் ரெங்கநாதன் கடைசியாக ஃபிராங்களின் கதையை ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. எல்.ஐ.கே படத்தை பொறுத்தவரைக்கும் அந்தப் படம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web