PRS1: பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்.. வெளியான புது பட அப்டேட்!.. மாஸ் வீடியோ!...

 
pradeep ranganathan


கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக மாறியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.
இவர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான எல்.ஐ.கே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்தான் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் மமீதா பைஜு மற்றும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்..

இந்த படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதன் எழுதியிருக்கிறார். ஆல்பா டீம் என்கிற அவர் நண்பர்கள் சிலர் ஒன்றாக இணைந்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார்கள். இந்நிலையில்தான் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவை பிரதீப் ரங்கநாதான் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

Tags

From Around the web