Pradeep Ranganathan: நடிச்சது மூணு படம்.. அதுக்குள்ள கேமியோவா?!.. இறங்கி அடிக்கும் பிரதீப் ரங்கநாதன்!..
Pradeeo Ranganathan:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்த பிரதீப் முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தார். புதுமுக இயக்குனர் என யாரும் அவ்வளவு எளிதாக கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ரவி மோகன் பிரதீப்பை நம்பி கால்ஷீட் கொடுத்தார் . அவரது நம்பிக்கையையும் பிரதீப் ரங்கநாதன் காப்பாற்றினார்.
காமெடி கலந்த படமாக கோமாளி படத்தை எடுத்திருந்தாலும் ஒரு வித்தியாசமான கதைகளமாக இருந்தது. ரவிமோகனும் யோகிபாபுவும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள். கோமாளி படத்தின் மிகப்பெரிய வெற்றி பிரதீப்பை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் முன் வந்தனர். ஆனால் இரண்டாவது படத்தில் நான் தான் ஹீரோ என்று சொன்னதும் வந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் பின் வாங்கினர்.
ஏனெனில் ஹீரோ மெட்ரீயலே இல்லாத ஆளாக பிரதீப் இருந்தார். இருந்தாலும் அர்ச்சனா கல்பாத்தி பிரதீப் மீது நம்பிக்கை வைத்தார். படத்தையும் எடுத்தார். அந்தப் படமும் பெரிய பெரிய வெற்றி. அதுதான் லவ் டுடே. இந்தப் படத்தை பிரதீப்தான் இயக்கினார். அதன் பிறகு முழு நேர ஹீரோவாக மாறினார். டிராகன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் பெரிய வெற்றி. அதுவும் இப்போதைய இளசுகளுக்கு தேவையான எல்லாவற்றையும் தன் படத்தில் வெளிப்படுத்தி வருவதால் இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறி இருக்கிறார்.

குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராகவும் மாறி வருகிறார் பிரதீப். சமீபத்தில் அவருடைய நடிப்பில் டியூட் படமும் வெளியானது. அதுவும் சக்கை போடு போட்டது. தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார் பிரதீப். இந்த நிலையில் வெளியாக கூடிய ஒரு புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாக கூடிய திரைப்படம் ‘தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு’ திரைப்படம் .இந்தப் படத்தில்தான் பிரதீப் கேமியோ ரோலில் வருகிறாராம். இந்தப் படத்தை சமீர் அலிகான் இயக்கியதோடு அவர்தான் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால், மான்சி என பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இது வெவ்வேறு பின்னணியில் உள்ள காதல் கதையாகும்.
