பெட்ரோல் போட கூட காசு இல்ல!.. காரை திருப்பி கொடுத்துட்டேன்!. பிரதீப் சொன்ன பிளாஷ்பேக்!...

Pradeep Ranganathan: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியை பார்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு முன் குறும்படங்களை இயக்கி வந்தார். இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி துறையில் வேலை செய்து வந்தார். ஆனால் ஆர்வமெல்லாம் குறும்படம், சினிமா ஆகியவற்றின் மீது இருந்தது. அப்பாவிடம் சொல்லாமலேயே ஐடி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கான முயற்சிகள் செய்வது, குறும்படங்களை இயக்குவது போன்ற வேலைகளை செய்து வந்தார். நண்பர்களிடம் பணம் வாங்கி இதுதான் சம்பளம் என வீட்டில் கொடுத்திருக்கிறார். பிரதீப்பின் அப்பா இப்போதும் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறார். எனவே பிரதீப்புக்கு பணக்கார பின்பலம் இல்லை.
கோமாளி திரைப்படம் வெற்றி என்றாலும் அந்த படத்தில் அவருக்கு பெரிய சம்பளம் கிடைக்கவில்லை. மூன்று வருடங்கள் கழித்து லவ் டுடே என்கிற கதையை எழுதி அதை அவரே இயக்கி நடித்தார். அதன்பின் டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது வருகிற தீபாவளிக்கு இவரின் Dude படம் வெளியாகியுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி LIK படம் வெளியாகியுள்ளது
இப்படி குறுகிய காலத்திலேயே உச்சிக்கு போய்விட்டார் பிரதீப் பிரகநாதன். இவருக்கென ரசிகர் கூட்டமும் உருவாகி இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இவரின் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன் ‘கோமாளி படம் ஹிட் ஆனதால் தயாரிப்பாளர் எனக்கு ஒரு காரை பரிசாக கொடுத்தார். ஆனால் நான் அதை திருப்பி கொடுத்து விட்டேன்.
ஏனெனில் அந்த காருக்கு பெட்ரோல் போட கூட என்னிடம் பணம் இல்லை. எனவே ‘அந்த காருக்கான பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள். எனக்கு கார் வேண்டாம்’ என சொல்லிவிட்டேன் அப்படி கிடைத்த பணத்தை மூன்றாண்டுகள் எனது அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டேன் என சொல்லி இருக்கிறார். அப்போது பெட்ரோல் போட கூட காசு இல்லாமல் இருந்த பிரதீப் தற்போது 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.