இத்தனை வருடங்களில் மக்களுக்காக வீதியில் இறங்கி நின்றது உண்டா? - விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

 
இத்தனை வருடங்களில் மக்களுக்காக வீதியில் இறங்கி நின்றது உண்டா? - விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் இயங்கி வருகின்றன. தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். விஜய் வருகையால் தமிழக அரசியல் களம் 4 முனை போட்டியாக மாறியுள்ளது. தவெக தலைவர் விஜய் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூடும் கூட்டம் கட்டுகடங்காமல் வருகிறது. இந்த தேர்தலில் விஜய் ஒரு முக்கிய பங்கினை வகுப்பார் என்றே பலர் கூறுகின்றன்ர்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பொதுகூட்டத்தில் பேசினார். அதில், சினிமாவில் நாம் டாக்டராகலாம், இன்ஜினியர் ஆகலாம், ஏன்… ஒரே பாட்டில் முதல்வர் கூட ஆகலாம். ஆனால், அரசியலில் அப்படியே நேரடியாக முதல்வர் ஆகிவிட முடியுமா? இத்தனை வருடங்களில் தமிழக மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ, தமிழர்களின் தன்மானத்திற்கோ ஒரு பிரச்சனை வந்தபோது அவர் மக்களுக்காக வீதியில் இறங்கி நின்றது உண்டா? நான் பேசிய அளவிற்காவது அவர் இதுவரை அரசியல் பேசியது உண்டா?" என சரமாரியாக விமர்சித்தார்.

From Around the web