என்னது பிரகாஷ் ராஜுக்கு 4 மாநிலத்தில் ஓட்டர் ஐடி இருக்கா?.. அவரு என்ன சொன்னாருன்னு பாருங்க!..
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த தகவலை திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால், இது முழுக்க முழுக்க ஃபேக் நியூஸ் என பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்து சோலியை முடித்து விட்டார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பல்வேறு சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில் கல்வித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்திய சினிமாவின் பல மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். திரைத்துறையிலும் சமூக விவகாரங்களிலும் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், அவர் தொடர்பான செய்திகள் அடிக்கடி கவனம் பெற்று வருகின்றன.
ಸುಳ್ಳುಸುದ್ದಿ ಸ್ರಷ್ಟಿಸುವುದರಲ್ಲಿ ಕಾರ್ಯನಿರತರಾದ ಮಾರಿಕೊಂಡವರು . ಪಾಪ ತುಂಬಾ ನೋವಾಗಿರಬೇಕು …😂😂😂 Sold out fellow’s..Cooking up Fake news and spreading them.. Must have been badly hurt 😂😂😂.. But I am happy I have kept them busy #justasking . pic.twitter.com/8SBGnRVB4p
— Prakash Raj (@prakashraaj) June 21, 2026
4 மாநிலங்களில் வாக்காளர் அட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக சில தகவல்கள் வைரலாகி வந்தன. ஆனால், அவை முழுக்க முழுக்க பொய்யான போலி செய்திகள் தான் என்றும் அவர்களை பிசியாக வைத்திருப்பதை நினைத்து தான் ரொம்பவே சந்தோஷமடைவதாக பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
