வாரணாசி படத்தோட மையக்கருவே இதுதான்!.. போட்டு உடைத்த பிரகாஷ் ராஜ்!..
ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரை உள்ள ஆழத்தை பார்க்கப் போறீங்க. ராமாயண தெய்வங்கள் முதல் இயற்கைப் பேரழிவுகள் வரை என ஏகப்பட்ட உணர்வுகளை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட அனுபவத்தை வாரணாசி படம் வழங்கப் போவதாக பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார்.
திரையுலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கும் புதிய படைப்பு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படைப்பு, ஆப்பிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதிகள், அண்டார்டிகாவின் பனிப்பரப்புகள், ராமாயணத்தில் இடம்பெறும் தெய்வீகக் கதாபாத்திரங்கள், இயற்கைப் பேரழிவுகள், மற்றும் கற்பனை உலகின் அதிசய அம்சங்கள் என பல்வேறு பரிமாணங்களை ஒரே கதையில் இணைக்கிறது.
ஆனால், இந்த மாபெரும் காட்சிகளும், சாகசங்களும் கதையின் மையம் அல்ல. அவற்றின் அடித்தளமாக இருப்பது, ஒரு தந்தை மற்றும் மகனுக்கிடையேயான ஆழமான பாசமும் உணர்வுப்பூர்வமான உறவும்தான். அந்த உணர்வே கதையை உலகின் பல்வேறு சூழல்களுக்கும், கற்பனை உலகங்களுக்கும் விரிவுபடுத்துகிறது.
ஆக்ஷன், சாகசம், புராணம், இயற்கையின் சீற்றம் மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் அனைத்தும் இணைந்த இந்தப் படைப்பு, பார்வையாளர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என பிரகாஷ் ராஜ் சமீபத்திய பேட்டியில் வாரணாசி படத்தின் மிகப்பெரிய கதைக்கருவை போட்டு உடைத்து விட்டார்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் வாரணாசி படத்தில் நடித்து வருகின்றனர்.
