×

கேஜிஎப் 2-வில் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ்... வைரலாகும் போஸ்டர்...

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. 
 

இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ்  ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை படைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான  தேசிய விருது பெற்றது.  கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளிவந்த இப்படம் பல்வேறு வெற்றிகளை குவித்தது.  

அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கினால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பது தெரியவந்துள்ளது. முதல் பாகத்தில் ராக்கியின் பெருமையை ஒரு பெண் அதிகாரியிடம் ஒரு நபர் விளக்குவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற கதாபாத்திரம் 2ம் பாகத்தில் பிரகாஷ் ராஜுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News