×

தற்கொலைக்கு முயன்ற நடிகரை காப்பாற்றிய பிரகாஷ்ராஜ் ! முன்னணி நடிகர் உடைத்த சீக்ரெட் !

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நடிப்புக்காக மட்டுமல்லாமல் நற்குணங்களுக்காகவும் ரசிர்களுக்கிடையே போற்றப்படுபவர்.

 

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் நின்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகரான ராஜா ரவீந்தர் பிரகாஷ்ராஜ் பற்றி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அதில் ‘மூத்த தெலுங்கு நடிகர் ஒருவர் ரூ.50 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அதை அறிந்த பிரகாஷ்ராஜ் அந்த நடிகரை உடனடியாக அழைத்து வரசொல்லி அந்த கடனை அடைத்தார்.’ எனக் கூறினார். ஆனால் அந்த மூத்த நடிகர் யார் என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News