நீயெல்லாம்... வெற்றிமாறன், மணிரத்னத்திற்கு சாபம் விட்ட பிரகாஷ்ராஜ்.. ஏன் தெரியுமா?
இயக்குனர் வெற்றிமாறன் இந்திய திரையுலகே ஒரு சிறந்த இயக்குனர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான அசுரன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது மட்டுமின்றி மிக சிறந்த விமர்சனங்களை பெற்றிருந்தது.
மேலும் சமீபத்தில் வெளியான பாவ கதைகள் என்ற Anthology திரைப்படத்தில், இவர் இயக்கிய 'ஓர் இரவு' என்ற பகுதி பார்ப்போர் நஞ்சை பதறவைக்கும் அளவு ஆணவ கொலை குறித்து படமாகி இருந்தார்.
இந்நிலையில் இப்படம் குறித்து வெற்றி மாறன் அளித்த பேட்டியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னிடம் கூறியது குறித்து பேசியுள்ளார். ஆம் பிரகாஷ் ராஜ் வெற்றிமாறனிடம் "நான் உங்களுக்கு சாபம்மிடுகிறேன், அடுத்த ஜென்மத்தில் நீ, மணிரத்தனமெலாம் ஒரு மிளகாய் மண்டியில் பல்லிகளாக பிறக்கனும்" என கூறினாராம்.
மேலும் ஓர் இரவு படத்தில் நடித்ததை நினைத்து ஒரு அரை மணி நேரம் அழுதாராம் நடிகர் பிரகாஷ் ராஜ், என வெற்றிமாறன் ஒரு பேட்டியில் அவரை குறித்து பெருமையாக பேசியுள்ளார்.