Connect with us

Cinema News

காதல் செய்த நேரங்களில் நம்ம சினேகா எப்படி இருந்துள்ளார் பாருங்களேன்.! லீக்கான சூப்பர் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடுவர். திரையுலகில் பல காதல்கள் முளைப்பதுண்டு. அதில் சில காதல்கள் மட்டுமே துளிர்விட்டு செடியாய் முளைத்து, மரமாக நின்று துளிர் விடுகின்றன. பல காதல்கள் முளையிலேயே கிள்ளி அறியப்படுகின்றன.

சில செடியாகும் வரை வளர்கின்றன. சில காதல்கள் மட்டுமே மரமாய் நின்று துளிர் விடுகின்றன. அதில் அஜித்குமார் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா  இந்த வரிசையில் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நட்சத்திர ஜோடி என்றால் அது சினேகா – பிரசன்னா தான்.

இதையும் படியுங்களேன் – அது மட்டும் போதாது.! இதுலயும் பங்கு வேணும்.! கெளதம் மேனன் உங்ககிட்டையுமா.?

இவர்கள் இருவரும் திரையுலகில் காதலித்து வந்து பிறகு, 2012இல் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஹான் எனும் மகன் இருக்கின்றான். இவர்கள் காதல் செய்த காலத்தில் 2009இல் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இருவரும் மிக அழகாக இருக்கின்றனர்.

சினேகா திருமணத்திற்கு பின்பு, சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்து அதிலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பிரசன்னா ஹீரோவாக நடித்து, அதன் பின்னர் தற்போது தனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top