×

துல்கரிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா.... நீ தமிழன்டா!

துல்கர் சல்மான் தயாரித்து நடித்த வரனே அவஷ்யமுண்டு படத்தில் சுரேஷ் கோபி வளர்த்த நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததுடன், அந்த பெயரை வைத்து காமெடி காட்சியும் வைத்திருந்தார்கள். இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் கடுப்பாகி துல்கர் சல்மானை திட்டித் தீர்த்தார்கள். அதன் பிறகு துல்கர் மன்னிப்பு கேட்டு ட்வீட் போட்டார்.

 

மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பிரசன்னா இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளார்.

பிரசன்னா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நம்ம ஊர்ல ஆணியே புடுங்க வேணாம் அல்லது என்ன கொடுமை சரவணன் என்பதை பயன்படுத்துவது போன்று தான் பழைய பட வசனத்தில் இருந்து அந்த பெயரை பயன்படுத்தியுள்ளனர். அந்த பெயரில் இருக்கும் சென்டிமென்ட் எனக்கு புரிகிறது. ஆனால் தவறாக புரிந்து கொண்டு வெறுப்பை பரப்ப வேண்டாமே.

மலையாள படங்கள் பார்க்கும் ஒரு தமிழனாக எனக்கு அந்த கான்டெக்ஸ்ட் புரிகிறுது. தவறான புரிதல் மற்றும் தேவையில்லாத பேச்சுகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் துல்கர். ஓர்மயுண்டே இ முகம் என்பது போன்று தான் அந்த பெயரை சுரேஷ் கோபி சார் பயன்படுத்தியுள்ளார் என்றர்.

பிரசன்னாவின் ட்வீட்டுகளை பார்த்த துல்கர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News