×

ஏழை சிறிமிக்கு நேர்ந்த பரிதாபம்... 1.5 லட்சம் கொடுத்த பிரசன்னா!

கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் கூட அசத்தி வருபவர் பிரசன்னா. அண்மையில் நடந்த படப்பிடிப்பின்போது ஒரு தம்பதி பிரசன்னாவை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
 

அப்பொழுது அவர்கள் தங்கள் மகளுக்கு திடீர் என்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது குறித்து பிரசன்னாவிடம் தெரிவித்துள்ளனர். ஏழைகளான தங்களால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று பிரசன்னாவிடம் கூறியுள்ளனர்.

அவர்களின் நிலைமையை புரிந்து கொண்ட பிரசன்னா அந்த சிறுமியை அனுமதித்துள்ள மருத்துவமனைக்கு போன் செய்து விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்திருக்கிறார் பிரசன்னா.

இவ்வளவு பெரிய தொகையை பிரசன்னா கொடுத்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. பிரசன்னாவுக்கு தங்கமான மனசு, அவரும், குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் மனதார வாழ்த்தியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News