×

பிறந்தநாள் கொண்டாடிய சினேகா... ஷாக் கொடுத்த பிரசன்னா!

சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் சினேகா. கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இவர் ஜோடி சேர்ந்து கலக்கியுள்ளார். 
 

இப்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ரியாலிட்டி ஷோ உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக நடிகரும் இவரது கணவருமான பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் ரெடி செய்து, சினேகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். குடும்பத்துடன் இவர்கள் சினேகாவின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. மேலும் தனது கணவருக்கு நன்றி தெரிவித்த சினேகா எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News