×

கருத்திற்கு பயந்து டிவிட்டரில் இருந்து விலகும் பிரசன்னா!

நடிகர் பிரசன்னா சமீபகாலமாக வில்லன் ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார். மாஃபியா படத்தின் முதல் பாகத்தில் அவர் வில்லனாக நடித்திருந்த நிலையில் அடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் அவர் நடிக்கிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் பிரபாகரன் பற்றிய சர்ச்சையில் சிக்கியிருந்த மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு ஆதரவாக பிரசன்னா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

துல்கருக்கு ஆதரவாக பேசிய பிரசன்னாவையும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் விமர்சித்தனர். அவரது குடும்பத்தினரையும் தவறான பேசினர் என கூறப்படுகிறது. அதனால் சமூக வலைத்தளங்களை விட்டு பிரசன்னா வெளியேற முடிவு செய்துள்ளார் என சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் அந்த செய்தி பற்றி விளக்கம் கொடுத்துள்ள பிரசன்னா, "நோ.. நான் சமூக வலைத்தளத்தில் இருண்டுஹ் வெளியேறவில்லை. இனி வெளியேறப்போவதும் இல்லை. இங்கு வெறுப்பை காட்டுபவர்களை விட அன்பு செலுத்துபவர்களி அதிகம் சம்பாதித்துள்ளேன்" என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News