Categories: Cinema News latest news

கோட் படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா கேரக்டர் இதுதான்!… அவங்களுக்கும் இந்த காட்சி இருக்கு?

Goat Movie: விஜய் நடிப்பில் கோட் படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று ரிலீஸான நிலையில் அதில் இருந்த பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவின் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்களை செய்யாறு பாலு சொல்லி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் எனப் பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: அஜீத்துக்காக பார்த்து பார்த்து சட்டையை வடிவமைத்த ஷாலினி… காதலிக்கே சஸ்பென்ஸ் வைத்த தல…!

இவர்கள் மட்டுமல்லாமல் மைக் மோகன், பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா, பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தான் விஜயுடன் அஜ்மல், பிரபுதேவா, பிரசாந்த் இருக்கும் போஸ்டர் வைரலானது.

இந்நிலையில் இவர்கள் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் இரண்டு கதாபாத்திரம் என்பது ரிலீஸான தகவல் தான். அதில் அப்பா விஜயாக நடிக்கும் கதாபாத்திரத்தின் நண்பர்களாக இவர்கள் வரலாம். முக்கியமாக இதில் பிரசாந்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித்தை பார்க்க முடியாமல் அழுத ஷாலினி!. அப்பதான் அவங்க லவ்வே புரிஞ்சது!. ரகசியம் சொன்ன இயக்குனர்..

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily