Categories: Cinema News latest news

தனுஷ் நடித்த படம் என் படத்தின் ஸ்கிரிப்ட்தான்! எல்லாத்துக்கும் இவர்தான் இன்ஸ்பிரேஷனா இருப்பார் போல

Actor Dhanush: தனுஷ் நடிப்பில் நீண்ட ஒரு இடைவெளிக்கு அப்புறம் ஹிட்டான திரைப்படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் திரைப்படம்தான். அதுவரை பாலிவுட், ஹாலிவுட் என ஒரு நான்கு வருடம் தமிழ் சினிமாவிற்கு இடைவெளி கொடுத்திருந்தார் தனுஷ். இந்த சூழ்நிலையில்தான் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி தனுஷிற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன. படமானது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் ஒரு ஆழமான நட்பை அதன் அழகை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

இதையும் படிங்க: நீங்க வருவீங்க… யார் உங்களுக்கு ஓட்டு போடுறது… விஜய் நடிகையின் அரசியல் ஆசை!

அதுவே பின் காதலாகி ஏன் ஒரு நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரக் கூடாது என்ற அடிப்படையில் படம் அமைந்திருந்தது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் மற்றும் நித்யா மேனன் அவர்கள் கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் என் படத்தின் ஸ்கிரிப்ட்தான் என நடிகர் பிரசாந்த் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதே கதையின் மையக் கருத்துடன் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘பிரியாத வரம் வேண்டும்’. அந்தப் படத்தில் பிரசாந்த் மற்றும் ஷாலினி ஆகியோர் நடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயுடனான விவாகரத்து பிரச்சனைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த அபிஷேக் பச்சன்.. இத காட்டிட்டாரே

இங்கு தனுஷ் வேறொரு பெண்ணை காதலித்து பின் தன் தோழியான நித்யா மேனனை கரம்பிடிப்பார். ஆனால் பிரியாத வரம் வேண்டும் படத்தில் ஷாலினி வேறொரு ஆணை காதலித்து பின் தன் நண்பரான பிரசாந்தை கரம் பிடிப்பார். அடிப்படையில் இரண்டும் ஒரே கதைதான். இதை பற்றி பிரசாந்த் கூறும் போது என் படம் ஒரு இன்ஸ்பிரேஷனாக வைத்து திருச்சிற்றம்பலம் படத்தை எடுத்திருப்பார்கள்.

prasanth

ஏற்கனவே வந்த ஒரு படத்தின் கதையை வைத்து திரும்பவும் அதே மாதிரியான கதையில் ஒரு படத்தை எடுப்பதில் எந்த தவறும் இல்லை. பிரியாத வரம் வேண்டும் படமும் நல்ல ஹிட். அதே போல் திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட் என பிரசாந்த் கூறியிருக்கிறார். அதே போல் இந்தியாவிலேயே முதன் முதலில் vfx பயன்படுத்திய திரைப்படமும் பிரசாந்த் நடித்த திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒன்னுல மூணு!… போட்டியில் இறங்கிய ஜோடிகள்… கோபத்தில் எழில்… மயிலு பிரச்னை முடிஞ்சிதா?

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini