Categories: Cinema News latest news

சிம்ரனை அழ வைத்த டாப் ஸ்டார்… அட இதுக்குப் போயா இப்படி ஆவீங்க..!

எப்போ வரும் என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களின் தாகத்தைத் தணித்தது போல நேற்று அதிரடியாக வந்து இறங்கியது அந்தகன் படம். அவர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது என்றே சொல்ல வேண்டும்.

அந்தகன் பட வெளியீட்டின்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதுல பிரசாந்த், சிம்ரன், தியாகராஜன், பிரியா ஆனந்த் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது சிம்ரன் ரொம்ப நாளைக்குப் பிறகு என்னை நம்பி இப்படி ஒரு கேரக்டர் ரோல் கொடுத்ததுக்கு நன்றி.

அதுல நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னாங்க. படப்பிடிப்பில் ஒரு குடும்பம் மாதிரி இருந்துருக்கோம் என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். அதன்பிறகு பேசிய பிரசாந்த், நான் இப்போ இங்கே வரும்போது எல்லாருமே படம் ரொம்ப நல்லாருக்கு, ரொம்ப நல்லா வந்துருக்குன்னு சொன்னாங்க. நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க.

Prashanth, simran

அதே மாதிரி எங்கூட நடிச்ச எல்லா நடிகர்களுமே, சிம்ரனா இருக்கட்டும், பிரியா ஆனந்தா இருக்கட்டும். எல்லாருமே ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. படம் எனக்குப் பிடிச்சிருந்ததுன்னு சொல்லும்போது கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்படி பிரசாந்த் பேசப் பேச சிம்ரன் கண்கலங்கி விட்டார்.

நேற்று வெளியான அந்தகன் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கொடுத்துள்ள கம்பேக் ரசிகர்களிடம் ஒரு உற்சாகத்தை உருவாக்கி உள்ளது. அந்தகன் படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வந்து இவ்வளவு நல்லபடியா வந்ததுக்குக் காரணமே ஒருத்தர் தான். அவர் என் தந்தை தியாகராஜன் சார். அவரது உழைப்பும், நோ காம்ப்ரமைஸ்னு சொல்லிட்டு இந்தப் படத்தை எடுத்திருக்காரு. எங்க எல்லாரையும் ரொம்ப அழகா நடிக்க வச்சிருக்காரு. நாங்க இவ்ளோ அழகா பெர்பார்ம் பண்ணியிருந்தா அதுக்குக் காரணமே டைரக்டர் தான் என்று பிரசாந்த் தனது தந்தையைப் பற்றியும் பேட்டியின் போது சொல்லத் தவறவில்லை.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v