Categories: Cinema News latest news

இவுங்க படம் எடுக்குற மாதிரி தெரியலயே… நேரத்தை வீணடிக்கும் பிரசாந்த்… பங்கமாய் கலாய்த்த பிரபல தயாரிப்பாளர்…

பிரசாந்த் நடிப்பில் “அந்தகன்” என்ற திரைப்படம் உருவாகி வருவதை பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இத்திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

Andhagan

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த பிரசாந்த், ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். சமீப காலமாக இவர் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இந்த நிலையில்தான் பாலிவுட்டில் சக்கை போடு போட்ட “அந்தாதுன்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன.

Andhagan

ஆதலால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. மேலும் இத்திரைப்படம் பிரசாந்த்தின் கம்பேக் திரைப்படம் எனவும் கூறப்பட்டது. எனினும் பல மாதங்களாக இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.

Andhagan

ஆனால் எதாவது பண்டிகையோ அல்லது சிறப்பு நாட்கள் வந்தால் மட்டும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை வெளியிடுகின்றனர். உதாரணத்திற்கு நேற்று ஹோலி பண்டிகைக்கு “ஹேப்பி ஹோலி” என்று ஒரு போஸ்டர் வெளிவந்தது. அதே போல் இன்று பெண்கள் தினம் என்பதால் “பெண்கள் தின வாழ்த்துகள்” என ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது. ஆதலால் இணையத்தில் பலரும் இப்படி போஸ்டர் வெளியிட்டுக்கொண்டே இருந்தால் எபபோது படத்தை வெளியிடுவார்கள் என கேலி செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், “நடிகர் பிரசாந்த்துக்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்தும், நல்ல திறமை இருந்தும், ஒரு படத்தை தயாரிக்க வசதி இருந்தும் தன்னுடைய திறமையையும் நேரத்தையும் வீணடிக்கிறாரே?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

Chitra Lakshmanan

அதற்கு சித்ரா லட்சுமணன், “என்னுடைய வீடியோவை பிரசாந்த்தும் பார்க்கிறார். அவரது தந்தையான தியாகராஜனும் பார்க்கிறார். உங்களுடைய கருத்தை நேரடியாக அவர்களிடம் தெரிவிக்க முடியாது. அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த யூட்யூப் சேன்னலை பயன்படுத்திக்கொண்டு உங்களது கேள்வியில் உங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்த கருத்தை நான் அப்படியே அவர்களுக்கு பார்வேர்டு செய்கிறேன். பார்த்துவிட்டு முடிவெடுக்க வேண்டியது பிரசாந்த்தும் தியாகராஜனும்தான்” என கிண்டல் தொனியோடு பதிலளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாடிவாசல் படத்துக்கு முட்டுக்கட்டை போடும் சூர்யா… ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!

Arun Prasad
Published by
Arun Prasad