எனக்கு நடிக்க தெரியாது - பிரீத்தி முகுந்தன்
கவின் நடித்த ஸ்டார் படம் மூலம் அறிமுகம் ஆனவர் பிரீத்தி முகுந்தன். முதல் படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனாலும் சாய் அபயங்கர் இசையில் வெளியான ஆல்பம் பாடலான ஆசை கூட பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அர்ஜூனுடன் அவர் நடித்த பிளாஸ்ட் மற்றும் அதர்வாவுடன் நடித்த இதயம் முரளி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரீத்தி முகுந்தன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து பேசினார். அதில் அவர் கூறியபோது, நான் ஒரு புறம் மாடலிங் செய்து கொண்டிருக்கும்போது எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 18. ஆனால் எனக்கு என்மீதே நம்பிக்கை இல்லாமல் என்னால் ஆடிஷன் செய்ய முடியாது என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள போகிறேன், எனக்கு நடிக்கதெரியாது என்றெல்லாம் பயந்தேன்.
அப்போது என் பெற்றோர் நேரடியாக கல்லூரி விடுதிக்கு வந்து என்னிடம் பேசினார்கள். நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது? முயற்சி செய் பரவாயில்லை என்று கூறி என்னை ஆடிசனுக்கு அனுப்பினார்கள். பெற்றோரின் அந்த வார்த்தைகள் தான் எனக்கு முதல் அடியை எடுத்துவைக்கத் தைரியம் தந்தது என்று கூறினார்.
