Categories: Cinema News latest news

எனக்கும் உதட்டு முத்த காட்சி வேண்டும்.! அண்ணனிடம் அடம்பிடிக்கும் பிரேம் ஜி.!

மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கியுள்ள திரைப்படம் மன்மதலீலை. இந்த திரைப்படத்தை மாநாடு ரிலீஸ்க்கு முன்பே கிடைத்த கொஞ்ச நஞ்ச கேப்பில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.

அதன் காரணமாக தான் இந்த படத்தை A வெங்கட் பிரபு QUICKY என விளம்பரப்படுத்தி இருந்தனர். இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க படைத்தலைப்பிற்கு ஏற்றவாறு சம்யுக்தா, ரியா சுமன், ஸ்ம்ரிதி வெங்கட் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்களேன் –யாரும் வேண்டாம் அந்த RRR ஹீரோயின் ஓகே.! அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்.!

இப்படத்திற்கு வெங்கட் பிரபு தம்பி பிரேம் ஜி அமரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கிளிசம்பஸ் வீடியோ நேற்று வெளியானது. வெளியாகி இணையத்தை அதிர வைத்தது என்றே கூறலாம். அந்தளவுக்கு வீடியோவில் ஹீரோயின்களின் உதட்டை கவ்வி இழுத்துவிட்டார் அசோக் செல்வன்.

இதனை குறிப்பிட்டு பிரேம் ஜி ஒரு மீம் ஒன்றை பதிவு செய்து அண்ணனை டேக் செய்துள்ளார். அந்த மீமில், அசோக் செல்வன் பிரேம் ஜியை பார்த்து இவனுக்கும் 2,3 கிஸ் சீன் வேணுமாம் என வெங்கட் பிரபுவிடம் கூறுவது போல இருந்தது. இதனை ஹீரோ அசோக் செல்வனும் ரிப்ளை செய்து இருந்தார்.

Manikandan
Published by
Manikandan