பென்ஷனுக்கு விண்ணப்பித்த பிரேமலதா.. ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க போல!..
Premalatha Vijayakanth: மறைந்த நடிகர் மற்றும் தேமுக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் இருக்கிறார்கள்
. விஜயகாந்த் இருந்தவரை அவரின் வெற்றிக்கு பின்னணியிலும், அவருக்கு உறுதுணையாகவும் இருந்தார் பிரேமலதா. விஜயகாந்த் அரசியல் கட்சி துவங்கிய போது தன்னை கட்சி பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு சில பதவிகளும் கொடுக்கப்பட்டது.
விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல வருடங்கள் வீட்டில் இருந்தபோது அவருக்கான பணிவிடைகளை எல்லாவற்றையும் பிரேமலதாவும் அவரின் மகன்களுமே செய்து வந்தனர். விஜயகாந்தின் மறைவுக்குப் பின் தேமுதிக பொதுச்செயலாளராகவும் மாறினார் பிரேமலதா. இப்போது தேமுதிக தொடர்பான எல்லா முடிவுகளையும் இவரே எடுக்கிறார். விரைவில் இந்த கட்சியின் மாநாடும் நடைபெறவிருக்கிறது.
அதோடு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருக்கிறது. இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சட்டப்பேரவை செயலகத்தில் குடும்ப பென்சனுக்கு விண்ணப்பத்தி இருக்கிறார். விஜயகாந்த் மறைந்து விட்டதால் முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் 15 ஆயிரத்தை தனக்கு அளிக்க வேண்டும் என அவர் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து ‘பிரேமலதா வறுமையில் வாடி மிகவும் கஷ்டப்படுகிறார் போல.. அதனால்தான் பென்சனுக்கு விண்ணப்பித்திருக்கிறார்’என பலரும் நக்கலடித்து வருகிறார்கள்.
