Categories: Cinema News latest news

மாநாடு ஓப்பனிங் காட்சி லீக்கானது.. டுவிட்டரில் பகிர்ந்த பிரேம்ஜி..!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாநாடு’. வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாதான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அண்ணாத்த படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்ததால் இப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்படம் நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், திடீரென இப்படம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் நேற்று அறிவித்திருந்தார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி டுவிட்டரில் ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார்.

ஆனால், அவர் காமெடியாக இப்படதின் ஓப்பனிங் சீன் லீக் ஆகியுள்ளதாக, டைட்டில் போடப்படும்போது வரும் புகைப்பிடித்தல் கேடு விளைவிக்கும் என அவர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த அவரது அண்ணனும் இயக்குனருமான வெங்கட்பிரபு டேய் டேய் என கலாய்ப்பதுபோல் ரிப்ளெ செய்துள்ளார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்