Connect with us

Cinema News

எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க… பாலாவிடம் வாய்ப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பொதுவாக நல்ல திரைப்படங்கள் ஏதேனும் வெளியானால் அந்த படத்தை பார்த்துவிட்டு தனக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என்றால், படக்குழுவினரை பாராட்டி விடுவார். இந்த பழக்கத்தை ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போதுவரை பின்பற்றி வருகிறார்.

அந்த வகையில், இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு விஷால், ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அவன் இவன். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்தில் வரும் காமெடி காட்சிகள், எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் பாலாவை அழைத்து பாராட்டினாராம். பாராட்டியத்திற்கு பிறகு தனக்கும் இந்த மாதிரி ஒரு கதை தயார் செய்யுங்களேன் நான் நடிக்கிறேன் என கேட்டுள்ளாராம்.

இதையும் படியுங்களேன்- அனுஷ்கா உடலில் இப்படி ஒரு பிரச்சனையா.?! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்…

சரி என்று அந்த பாராட்டை பெற்று கொண்ட இயக்குனர் பாலா, ரஜினியின் கோரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே கூறலாம். ஏனென்றால், அதற்கான எந்த நடவடிக்கையும் பாலா முன்னெடுக்கவில்லை. இதற்கு பிறகும் நாயகனுக்கு துதிபாடும் படங்களை அவர் இயக்க போவதுமில்லை அதுதான் இயக்குனர் பாலாவின் ஸ்டைல்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top