×

கனிகா கபூருடன் இளவரசர் சார்லஸ் - இதனால்தான் அவருக்கு கொரோனா வந்துச்சா? 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றரனர்.
 

மறைந்த டயானாவின் கணவும், இங்கிலாந்து இளவரசருமான சார்லஸும் கொரானா பாதிப்புக்கு தப்பவில்லை. தற்போது அவர் தனிமைப்படுத்தப்படு சிகிச்சை பெற்று வருகிறார். 

அதேபோல், பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அந்த பாதிப்பை மறைத்து, தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் 3 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார். அஜாக்கிரதையாக செயல்பட்டடதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இளவரசர் சார்லஸ் கலந்து கொண்ட விழாவில் கனிகா கபூர் கலந்து கொண்டு, அவருடன் கை குலுக்கிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, கனிகா கபூர் மூலமாகவே சார்லஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதே சமயம் இப்புகைப்படம் எப்போது எடுக்கப்படது என்கிற விபரம் தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News