×

கைதி வெற்றி தந்த உற்சாகம்… மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி!

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

 

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்தி நடித்து வந்த சுல்தான் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்து முடிந்தது. இந்த படத்தில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருக்க ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இதையடுத்து அந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படமும் கார்த்தியின் கைதி திரைப்படமும் நேருக்கு நேர் மோதின. இரண்டு படங்களும் வெற்றி பெற்றாலும் கைதி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றது. அந்த தைரியத்தில் மீண்டும் விஜய் படத்தோடு தன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் கார்த்தி.

From around the web

Trending Videos

Tamilnadu News