×

கொரோனாவால் பாலைவனத்தில் 58 பேருடன் சிக்கிய பிருத்விராஜ் – சிறப்பு விமானத்தில் இந்திய வருகை!

மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிறப்பு விமானம் மூலம் படக்குழுவினர் இந்தியா அழைத்து வரப்பட இருக்கின்றனர்.

 

மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிறப்பு விமானம் மூலம் படக்குழுவினர் இந்தியா அழைத்து வரப்பட இருக்கின்றனர்.

மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றியது. இந்த படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுவினர்.

அப்போது கொரோனா உலகம் முழுவதும் பரவ அனைத்து நாடுகளும் பொது முடக்கத்தை அறிவித்தனர். இதனால் இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழலை உருவாகியது. இதனால் அங்கேயே இரண்டு மாதங்களாக சிக்கிக்கொண்ட படக்குழு, அந்நாட்டு அரசிடம் அனுமதி வாங்கிய படக்குழு படப்பிடிப்பை நடத்தி முடித்தது. அது சம்மந்தமாக பிருத்விராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த குழுவினருடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள படக்குழுவையும் மீட்க தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 58 பேரும் தனி விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து கொச்சிக்கு மேலும் ஒரு விமானத்தில் வர இருக்கின்றனர். 60 நாட்களுக்கு மேல் பாலைவனத்தில் கஷ்டப்பட்ட படக்குழுவினரின் வருகை அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News