I, Nobody Box Office : 2 நாட்களில் பிரித்விராஜின் 'ஐ, நோபடி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
I nobody 2 days collection

2 நாட்களில் 'ஐ, நோபடி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. மலையாள சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை டிக் அடித்து நடித்து வருபவர் பிரித்விராஜ் சுகுமாரன்.

இவர் நடித்துள்ள புதிய க்ரைம் த்ரில்லர் படம் 'ஐ, நோபடி'. பிரித்விராஜுக்கு கோலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் மார்க்கெட் இருப்பதால் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்து மொத்தம் 3 மொழிகளில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்தனர்.

இதில் ஹீரோயினாக பார்வதி நடித்துள்ளார். சமீர் அப்துல் கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி தான் லாஜிக் இல்லாமல் இருப்பதாகவும் விமர்சனங்கள் வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.5.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

From Around the web