I, Nobody Box Office : பிரித்விராஜின் 'ஐ, நோபடி' படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 10, 2026, 09:40 IST
'ஐ, நோபடி' படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. மலையாளத்தில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'ஐ, நோபடி'.
இந்த படம் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நேற்று (ஜூலை 9-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இதில் ஹீரோவாக பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருக்கிறார். இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜயராகவன், ஹக்கிம் ஷாஜகான், பீனா சந்திரன், ரோனி வர்கீஸ், அசோகன், ஐரா, நந்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.2.55 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
