பிரித்விராஜின் Khalifa மேக்கிங் வீடியோ வெளியானது!
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலையாள படம் தான் 'கலீஃபா' (Khalifa). இந்த படத்தை இயக்குநர் வைசாக் இயக்கியுள்ளார்.
இதில் முக்கிய வேடங்களில் நீல் நிதின் முகேஷ், மாளவிகா ஷர்மா, இந்திரன்ஸ், சிவாஜித் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் மலையாள 'சூப்பர் ஸ்டார்' மோகன் லால் நடித்துள்ளார்.
இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆல்ரெடி வெளியான இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
#KHALIFA.
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 19, 2026
London #BTS 💥
Trailer: https://t.co/TjOkssiPBC
Bookings: https://t.co/2ZWzgORUnZ
In cinemas worldwide — Tomorrow! pic.twitter.com/FRal7w1TNi
படத்தை நாளை (ஆகஸ்ட் 20-ஆம் தேதி) மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பிரித்விராஜ் எக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.