Categories: Cinema News latest news

உங்களால தான் கலாச்சாரம் கெட்டுப்போகுது! நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்த நடிகை…!

ஆடை என்பது அவரவர் சுதந்திரம். ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். மாறாக நீ இந்த உடையை தான் அணிய வேண்டும் என ஒருவரை கட்டாயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. அது சினிமா நட்சத்திரமாக இருந்தாலும் சரி சாமானிய மக்களாக இருந்தாலும் சரி.

இப்படி உள்ள நிலையில், பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தொப்புள் தெரியும்படியான ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதை கண்ட பலரும் அவரை புகழ்ந்து கமெண்ட் செய்ய ஒரு சிலர் மட்டும் கோக்கு மாக்காக கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

priya bavani sakar

அதில் ஒரு நபர் உச்சக்கட்டமாக பிரியா பவானி சங்கரிடம் உங்களின் உள்ளாடை சைஸ் என்ன என்று மிகவும் கொச்சையாக கேள்வி எழுப்பி இருந்தார். மற்றொரு நபரோ ஏன் சமீப காலமாக நீங்கள் கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள்? நம் கலாச்சாரம் என்ன ஆவது? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரியா கூறியதாவது, “Crop top போட்டு ஒரு போட்டோ போட்டா உங்கள மாதிரி ஆளுங்க காண்டாகுறாங்க அதை பார்க்க ஜாலியா இருக்கு. அப்புறம் கலாச்சாரம்? Crop டாப் போட்ட ஒரு பொண்ணு உங்க கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீங்க பண்றதே நல்லா தான் பண்ணிட்டு இருக்கீங்க” என கூறியுள்ளார்.

priya bavani sakar

இதுவரை ஹோம்லியான வேடங்களில் நடித்து வந்த ஒரு நடிகை திடீரென கிளாமருக்கு மாறியது தான் நம் கலாச்சாரம் பாதிக்கப்பட காரணம் என பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். ஆடை என்பதெல்லாம் அவரவர் விருப்பம் என பலரும் பிரியாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்