×

கிளாமர் போட்டோஷூட்... பிரியா பவானி சங்கரின் சீக்ரெட் மெசேஜ்

செய்தி வாசிப்பாளராகக் கரியரைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், 2021-ல் கோலிவுட்டின் பிஸியாக நடிகைகள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரியா பவானி சங்கர், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில் நடிக்க
 

செய்தி வாசிப்பாளராகக் கரியரைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், 2021-ல் கோலிவுட்டின் பிஸியாக நடிகைகள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரியா பவானி சங்கர், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அவருக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸாக படக்குழுவினர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அவதாரம் எடுக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரியா பவானி சங்கர் நடிப்பில் இந்த ஆண்டு 4 படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், சிம்பு - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஒப்பிலி என்.கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் பிரியா, தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பும் பிரியாவுக்கு பிறந்தநாள் பரிசாக அறிவிக்கப்பட, பொண்ணு டபுள் குஷியில் இருக்கிறார். 

Priya bavani sankar

செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, சீரியல் வாய்ப்பு வர அதை முதலில் மறுத்தவர், சீரியல்ல நானா... என்று சொல்லியிருந்தார். சீரியல் நாயகியான பின்னர், வெள்ளித்திரை குறித்து, சினிமாலாம் நமக்கு செட்டாகாது என்றார். 

ஹீரோயினான பின்னர் குடும்பபெண்ணாகவே நடித்துவந்தார். கவர்ச்சியா... ச்சீ...ச்சீ என்று சொன்ன பிரியாவின், சமீபத்திய போட்டோஷூட் படங்களில் கிளாமர் நெடி கொஞ்சம் தூக்கலாகவே வீசுகிறது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், கவர்ச்சிக்கும் ரெடினு இந்த போட்டோக்களால் மெசேஜ் தட்டியதாகவே இதைப் பார்க்கிறார்கள். பொண்ணு அடுத்த என்ன ஸ்டேட்மெண்ட் விடப்போகுதோ.... என்கிறார்கள் ரசிகர்கள்.  

- ஜான்சி

From around the web

Trending Videos

Tamilnadu News