ஓவர் பந்தா இல்லாமல் எளிமையாக நடந்த பிரியா பவானி சங்கர் திருமணம்!..
கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத்திற்கு திருமணம் நடைப்பெற்று வரும் நிலையில் இங்கு சமீபத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இருமுடி படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா பவானி சங்கரின் திருமணமும் நடந்து முடிந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சிரியலில் நடித்து பிரபலமான இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது டிமான்டி காலனி 3, மரகத நாணயம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Marriage💍 Priya Bhavani Shankar tied the knot with her longtime boyfriend Raj Velu💥 https://t.co/YSRRQkZ63o
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 11, 2026
பிரியா பவானி சங்கர் தனது 10 வருட காதலரான ராஜ்வேல் ராஜை திருமணம் செய்துகொண்டுள்ளார். நேற்று ப்ரியாபவானி சங்கர் கைகளில் மருதாணி போட்டுக்கொண்டும், காதலுடன் மாலை அணிந்தும் பகிர்ந்த புகைப்படங்கள் குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அதற்கான பதிலாக திருமண வீடியோவே வெளியாகியுள்ளது. ராஜ்வேல் ராஜ் ஒரு தொழிலதிபர், இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டிலேயே இணைந்து வீடு வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், அவர் சிம்பிளான அவுட் ஃபிட்டில் திருமணம் செய்துக்கொண்டது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
