Categories: Cinema News latest news

சார் அந்த கிளாமர் பாட்டு எங்க இருக்கும்.! ஆர்வமாய் கேட்ட பிரியா பவானிசங்கர்.! அதிர்ந்து போன ரசிகர்கள்.!

டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக ராசிகர்களை கவர்ந்து, அதன் பின்னர், சீரியலில் அதனை விட அதிகமான ரசிகர்களை கவர்ந்து, பெரும் ரசிகர் பேராதரவுடன் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை பிரியா பவானிசங்கர்.

சீரியலில் இருந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றதால் தற்போது வரையில் கிளாமருக்கு நோ சொல்லி வருகிறார் பிரியா. அதனாலே அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியாபவானிசங்கர்.

இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள யானை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹரி படத்தில் நடிக்கிறார் என்றவுடன் எப்படியும் ஒரு கவர்ச்சி கிளாமர் பாடல் இருக்குமே என ரசிகர்கள் சற்று அதிர்ந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதையும் படியுங்களேன் – இப்போ இதுதான் ட்ரெண்டு.., ‘கொம்பன்’ முத்தையா காட்டில் அடைமழை.! கார்த்தி, கமல், ஆர்யா, ஜெயம் ரவி.?

அதில் ஒரு பத்திரிகையாளர் , கிளாமர் பாடல் இருக்கா என்பது போல் கேட்க, அதற்கு பதிலளித்த பிரியா, ‘ முதலில் ஹரி சார், கதை கூறும் போது முழு கதையும் கேட்டேன். பின்னர் கடைசியாக நான், சாரிடம், சார் அந்த செட் சாங் (கிளாமர் பாட்டு) எப்போது வரும் என கேட்டேன் . அதற்கு அவர் அது இந்த படத்தில் இல்லைமா. நான் முன்ன மாறி படம் எடுக்குறது இல்லை என கூறிவிட்டார்.’ என மிகுந்த உற்சாகத்தோடு பதில் கூறினார் பிரியா பவானிசங்கர். இதனை கேட்ட பின்பு தான் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.

Manikandan
Published by
Manikandan