Categories: Cinema News latest news

அந்த நபருடன் இருந்த வீடியோ பதிவிட்டு சோகத்தில் மூழ்கிய பிரியா பவானிசங்கர்… குழப்பத்தில் ரசிகர்கள்…

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக மாறி இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே இவருகென்று பல ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

இதனால், இவருக்கு சின்ன திரையில், சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. பிறகு வெள்ளித்திரையில் “மேயாத மான்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா, யானை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் கலந்த வீடியோ ஒன்றை வெளியீட்டு மிகவும் சோகமாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் 3 ஆண்டுகளுக்கு முன்பான எனது நினைவுகள் தொலைபேசியை எடுக்கையில் பழைய ஞாபகங்கள் வந்தது. நான் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன்.

இதையும் படியுங்களேன்-மீண்டும் அந்த விஷயத்தை தூசிதட்டும் தனுஷ்….சூப்பர்ஸ்டார் கொடுத்த மரண அடி ஞாபகமிருக்கா சார்.?!

மிகவும் இருண்ட இடத்தில் இருப்பதாக உணர்ந்தேன். அன்று காலை எங்காவது ஓடிவிடலாஆ என யோசித்தேன். அன்று மாலை எந்த திட்டமும் இல்லாமல் நாங்கள் விமானத்தில் ஏறினோம்.தற்போது திரும்பிப் பார்க்கும்போது யாருமில்லாமல் தவிப்பது போல் இருக்கிறது. நான் அப்போது நினைத்தது மிகவும் வேடிக்கையானது.

இது ஒரு கடினமான நேரம் என உணர்பவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது. இது ஒரு நிலை மற்றும் நீங்கள் இதை கடந்து செல்வீர்கள். இது முடிவல்ல. அடுத்த 3 வருடத்தில் உங்களுக்கு புதிய பிரச்சனைகள் வரும். அப்போது உங்கள் பழைய பிரச்சனைகளை பார்த்து சிரித்து கொள்வீர்கள்.அதற்கான மன வலிமையை வளர்த்துக் கொள்வீர்கள். எப்போதும் புன்னகையோடு வாழுங்கள். ஏனெனில் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் எப்போதும் நம் வாழ்வில் இருந்து கொண்டே இருக்கும்.

Manikandan
Published by
Manikandan