×

காதலனுடன் சண்டை போடும் பிரியா பவானி ஷங்கர் - வைரலாகும் போட்டோ!

பிரியா பவானி சங்கர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

பிரியா பவானி சங்கருக்கு ராஜவேல் என்கிற காதலன் இருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை. அவ்வப்போது நிறைய பேட்டிகளில் கூட அவரை பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " "நீங்கள் யாருடன் கோபமாக இருக்கிறீர்களோ அவர்களுடன் சில சமயங்களில் பயணிக்க வேண்டியிருக்கும். அப்போது அந்த நபர் போட்டோ எடுத்து சண்டையை சரி செய்துவிடலாம் என்று நினைத்து உங்களை படம் பிடிப்பார். ஆனாலும், நீங்கள் அவர் மீது எரிந்து விழ காத்திருக்கும் தருணம்" என கூறி கோபமாக முகத்தை வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News